Press "Enter" to skip to content

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகை

தமிழக சட்டசபை தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகிறார்.

சென்னை:

தமிழகத்தில் ஏப்ரல் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பற்றி ஆய்வு செய்ய ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில் உயர்மட்டக் குழு அதிகாரிகள் குழு கடந்த டிசம்பர் 22, 23-ந் தேதிகளில் சென்னைக்கு வந்திருந்தனர்.

அப்போது மாநில அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை வங்கி அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து, தேர்தலை சுதந்திரமாக நடத்துவது குறித்து ஆலோசனைகளையும், கருத்துகளையும் கேட்டறிந்தனர்.

இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் குழு இன்று தமிழகம் வருகை தர உள்ளனர் என் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டசபை பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஆயத்தப் பணிகள் குறித்தும் அவர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »