Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தானில் இந்தியா புதிய அணை கட்டுகிறது – பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

காபூல் ஆற்றின் குறுக்கே லாலந்தர் (ஷாதூட்) என்ற புதிய அணையை கட்டித்தர பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

புதுடெல்லி:

அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இந்தியா இதுவரை 400-க்கு மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி முடித்துள்ளது. சல்மா என்ற அணையை ஏற்கனவே கட்டிக் கொடுத்துள்ளது.

இந்தநிலையில், காபூல் ஆற்றின் குறுக்கே லாலந்தர் (ஷாதூட்) என்ற புதிய அணையை கட்டித்தர உள்ளது. இந்த அணை, காபூல் நகரில் சுமார் 20 லட்சம் வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவும், சுற்று வட்டார பகுதிகளின் நீர்ப்பாசன தேவைக்கும் பயன்படும் என்று தொிகிறது.

இந்த அணையை கட்டி தருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. மோடிக்கு அஷ்ரப் கனி நன்றி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசுகையில், ‘‘ஆப்கானிஸ்தானின் வளர்ச்சியையும், இந்தியா-ஆப்கானிஸ்தான் நட்புறவையும் எந்த அன்னிய சக்தியாலும் தடுக்க முடியாது. ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரிப்பது கவலை அளிக்கிறது. அங்கு போர் நிறுத்தம் ஏற்படுவதை ஆதரிக்கிறோம்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »