Press "Enter" to skip to content

ஆவடியில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் மார்க்-1ஏ பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

சென்னை ஆவடியில் உள்ள ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள அர்ஜுன் மார்க்-1ஏ பீரங்கியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சென்னை:

சென்னை மெட்ரோ தொடர் வண்டி விரிவாக்க திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்னை வந்த அவர், 11.30 மணியளவில் விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தை அடைந்தார். 

இப்போது, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், புதிய வசதிகளுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து ராணுவத்திடம் ஒப்படைத்தார். ராணுவ  தளபதி எம்எம் நரவனே மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்த அதிநவீன அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியானது, சென்னை ஆவடியில் உள்ள ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்துடன் டி.ஆர்.டி.ஓ இணைந்து அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை உருவாக்கியுள்ளது. இந்த அதிநவீன பீரங்கியைப் பயன்படுத்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, 118 அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி டாங்கி வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்திய ராணுவம், ஏற்கெனவே 124 அர்ஜுன் ரக பீரங்கிகளை பயன்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, கூடுதலாக இந்த 118 அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனங்களும் சேர்கின்றன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »