Press "Enter" to skip to content

இது சட்டத்தின் ஆட்சி ஆகாது… சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

வன்முறையை தூண்டுவதாகக் கூறி சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை டெல்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்த கைது நடவடிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:-

திஷா ரவியை பொய்யான குற்றச்சாட்டுகளில் காவல் துறையினர் கைது செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை சர்வாதிகார வழிகளில் அடக்குவது சட்டத்தின் ஆட்சி ஆகாது. இத்தகைய தண்டனை தரும் நடவடிக்கை எடுப்பதை பாஜக அரசு தவிர்க்க வேண்டும். இளைஞர்களிடம் இருந்து எழும் எதிர்ப்பு குரல்களுக்கு மத்திய அரசு செவிமடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »