Press "Enter" to skip to content

கடந்த 1½ மாதங்களில் தமிழகத்தில் 660 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 1½ மாதங்களில் மட்டும் 660 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை:

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் மழை மற்றும் குளிர் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன. அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் 8 ஆயிரத்து 527 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில்தான் அதன் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என்பதால், கடந்த ஆண்டு தமிழகத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி, மழைக்காலங்களில் கொசு ஒழிப்புப் பணிகள் தமிழகம் முழுவதும் துரிதப்படுத்தப்பட்டன.

இந்தநிலையில் 2020-ம் ஆண்டு டெங்கு பாதிப்பு விகிதம் ஏறத்தாழ 75 சதவீதம் குறைந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், நடப்பு ஆண்டில், கடந்த 1½ மாதங்களில் மட்டும் 660 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், 2020-ம் ஆண்டு இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 1,086 ஆக இருந்ததாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »