Press "Enter" to skip to content

செவ்வாயில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் அனுப்பிய படங்கள்

நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியதும் அங்குள்ள பகுதியின் சில படங்களை தனது ஒளிக்கருவி (கேமரா)வில் படம் பிடித்து அனுப்பியது.

வாஷிங்டன்:

செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ‘பெர்சவரன்ஸ்‘ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.
 
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பினர். செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும், இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.

இதற்கிடையே, செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக நேற்று தரையிறங்கியது என நாசா தெரிவித்துள்ளது.

நாசாவின் செவ்வாய் கிரக பயணத்தில் பங்கேற்று வழிநடத்திய பெருமை இந்திய வம்சாவளி விஞ்ஞானியான ஸ்வாதி மோகனுக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் அங்குள்ள பகுதியின் சில படங்களை தனது ஒளிக்கருவி (கேமரா)வில் படம் பிடித்து அனுப்பியது.

பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாயில் தரையிறங்கிய சில மணி நேரங்களில் குறைந்த ரெசல்யூஷன் கொண்ட பொறியியல் ஒளிக்கருவி (கேமரா)க்களால் எடுக்கப்பட்ட செவ்வாய் கோளின் இரு படங்களை அனுப்பியுள்ளது. இந்த படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

வருங்காலத்திலும் பெர்சவரன்ஸ் ரோவர் நிறைய படங்களை எடுத்து அனுப்பும் என எதிர்பார்க்கலாம்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »