Press "Enter" to skip to content

2 நாள் பயணமாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மாலத்தீவுக்கு சென்றார்

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக மாலத்தீவு நாட்டுக்கு சென்றார்.

மாலே:

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக மாலத்தீவு நாட்டுக்கு நேற்று சென்றார். அந்த நாட்டின் அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் விடுத்த அழைப்பை ஏற்று சென்றுள்ளார். விமானம் மூலம் மாலத்தீவு தலைநகர் மாலே சென்றடைந்த ஜெய்சங்கரை அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி அப்துல்லா சாகித், வெளியுறவு இணை மந்திரி அகமது கலீல் ஆகியோர் நேரில் வரவேற்றனர்.

ஜெய்சங்கர் தனது 2 நாள் பயணத்தின்போது மாலத்தீவு அரசின் மூத்த தலைவர்கள் பலரை நேரில் சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மாலத்தீவில் இந்தியாவின் மானிய உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சில திட்டங்களை ஜெய்சங்கர் தொடங்கி வைப்பார் என்றும் இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜெய்சங்கர் தனது மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து மொரிஷியஸ் நாட்டிற்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »