Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு எதிரான போரில் உலகளாவிய தலைவர், இந்தியா – ஐ.நா. சபை பாராட்டு

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியாவின் தலைமைக்கும், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி உதவிக்கும் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நியூயார்க்:

மக்கள் தொகை பெருக்கத்தில் உலகின் 2-வது பெரிய நாடு என்ற வகையில் இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி விடும் என்று உலக நாடுகள் அஞ்சியது உண்டு.

ஆனால் இந்தியா சரியான தருணத்தில் ஊரடங்கு, பொதுமுடக்கம் அறிவித்து, கட்டுப்பாடுகளை பின்பற்ற வைத்ததால் பரவல் குறைந்தது. மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை அதிரடியாக ஏற்படுத்தி, மீட்பு நடவடிக்கையிலும், உயிர்ப்பலிகளை குறைத்ததிலும் இந்தியா உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக அமைந்தது. இன்று வரை கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை இந்தியா வெற்றிகரமான ஒன்றாக மாற்றிக்காட்டியும் உள்ளது.

கொரோனா தடுப்பூசிகளை உருவாக்குவதிலும் வேகம் காட்டியது. ஒரே நேரத்தில் 2 தடுப்பூசிகளை உள்நாட்டில் தயாரித்து அவற்றின் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் வழங்கி உள்ளது. அந்த தடுப்பூசிகள் உள்நாட்டில் பயனாளிகளுக்கு போடப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த தருணத்தில் ஐ.நா. அமைதிப்படையினருக்கு இந்தியா கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதாக வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.

இதை ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பாராட்டி உள்ளார். இந்த தகவலை ஐ.நா.சபைக்கான இந்திய தூதர் திருமூர்த்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் ஐ.நா.சபை பொதுசெயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பிப்ரவரி 17-ந் தேதியிட்டு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஐ.நா. அமைதிப்படையினருக்கு 2 லட்சம் தடுப்பூசிகள் வழங்குவதாக அறிவித்ததற்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துள்ளார் என கூறி உள்ளார்.

மேலும், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பதிலளிப்பு நடவடிக்கையில் இந்தியா உலகளாவிய தலைவராக இருந்துள்ளது எனவும் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதையொட்டி ஐ.நா. சபையின் இந்திய தூதர் திருமூர்த்திக்கு, ஆண்டனியோ குட்டரெஸ் எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

உண்மையில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு முக்கியமான மருந்துகள், கண்டறியும் கருவிகள், வென்டிலேட்டர்கள், சுய பாதுகாப்பு கருவிகள் வழங்கி, கொரோனா தொற்றுநோய் பதிலளிப்பு முயற்சிகளில் இந்தியா உலகளாவிய தலைவராக உள்ளது.

உலக சுகாதார நிறுவனம் தற்போது அங்கீகரித்துள்ள 2 தடுப்பூசிகளில் ஒன்றை உருவாக்கி, உற்பத்தி செய்வதில் இந்தியா மேற்கொண்ட முயற்சிகள், உலகளாவிய தடுப்பூசி சந்தையில் மிகவும் தேவையான வினியோகத்தை கொண்டு வந்துள்ளது. மேலும் தடுப்பூசி கிடைக்கச்செய்வதில் சமமான அணுகலை உறுதி செய்வதற்காக உலகளாவிய கோவாக்ஸ் வசதியை ஆதரிப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் நீங்கள் தொடர்ந்த முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »