Press "Enter" to skip to content

திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கிய போக்குவரத்து தொழிலாளர்கள்

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

சென்னை:

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன. ஆனால் இந்த போராட்டத்தை ஏற்காத தமிழக அரசு, பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது. அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு வரவேண்டும் என்றும், பணிக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அரசு எச்சரித்தது.

ஆனால் திட்டமிட்டபடி போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் இதில் பங்கேற்றுள்ளதால் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படவில்லை. 

அதிமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். இதேபோல் போராட்டத்தில் கலந்துகொள்ளாத தொழிற்சங்கத்தினரும் பணிக்கு வந்துள்ளனர். அவர்கள் மூலம் இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன. 

சென்னை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. சென்னையில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்து கழகம் கூறி உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »