Press "Enter" to skip to content

தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் இந்திய தேர்தல் ஆணைய தலைவர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மே மாதம் 23-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வந்தது. ஐந்து மாநிலங்களிலும் பலகட்டமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில் இன்று ஐந்து மாநில தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.

அப்போது ‘‘தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ளன. மே மாதம் 24-ந்தேதி தற்போதுள்ள ஆட்சிக்காலம் முடிவடைகிறது. தமிழகத்தில் 88,936 வாக்குப்பதிவு மையங்கள். கடந்த தேர்தலை விட 34.73 சதவீதம் அதிகம். வாக்குப்பதிவு மையங்கள் அனைத்தும் தரைத்தலத்தில் இருப்பதை உறுதிப்படுத்த உத்தரவு.

தமிழக தேர்தல் பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமனம். வேட்புமனு தாக்கலுக்கு 2 பேர் மட்டுமே அனுமதி. இரண்டு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. வாக்கு மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்கும்.

வேட்பாளர் 30.8 லட்சம் ரூபாய் செலவு செய்ய அனுமதி. புதுச்சேரியில் 22 லட்சம் ரூபாய் செலவு செய்ய அனுமதி.  தமிழகத்திற்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடத்தப்படும். மே-2ந்தேதி ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகும்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »