Press "Enter" to skip to content

கல்லெண்ணெய், டீசல் விலை உயர்வு

சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டருக்கு 93.11 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்., ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் கல்லெண்ணெய், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.

சென்னையில் நேற்று கல்லெண்ணெய், லிட்டர் 92.90 ரூபாய், டீசல் லிட்டர் 86.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று கல்லெண்ணெய் லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ 93.11 ஆகவும், டீசல் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ 86.45 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »