Press "Enter" to skip to content

ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து நாளை பிரசாரத்தை தொடங்கும் கமல்ஹாசன்

கமல்ஹாசன் ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து, நாளை மாலை பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.

சென்னை:

சட்டசபை தேர்தலில் உணர்வுபூர்வமாக எம்.ஜி.ஆருக்கு, கமல்ஹாசன் அதிக முன்னுரிமை அளித்து வருகிறார். அதன்படி, சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு பிந்தைய பிரசார சுற்றுப்பயணத்தை ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து, கமல்ஹாசன் நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு தொடங்க இருக்கிறார்.

ராமாவரத்தை தொடர்ந்து, கொளப்பாக்கம், கிருகம்பாக்கம், மணப்பாக்கம், ஆலந்தூர், கிண்டி போட்டிகோர்ஸ், நந்தனம், மயிலாப்பூர் லஸ் கார்னர் என 25 இடங்களில் கமல்ஹாசன் பிரசாரம் செய்கிறார். நேரத்தை பொறுத்து 25 இடங்களில் 4 அல்லது 5 இடங்கள் தேர்வு செய்து, அதில் கமல்ஹாசன் திறந்த வேனில் நின்றப்படி மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு, கமல்ஹாசன் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்து வருவதால், உணர்வுப்பூர்வமாக எம்.ஜி.ஆர். முதன் முதலாக போட்டியிட்டு வெற்றிப் பெற்ற ஆலந்தூர் தொகுதியில் கமல்ஹாசன் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »