Press "Enter" to skip to content

அதிமுக கூட்டணியில் தேமுதிக, தமாகா-வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள்

அதிமுக – தேமுதிக இடையே 10 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த தொகுதி பங்கீட்டு பிரச்சினை இன்று முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க., த.மா.கா.வுக்கு தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்படுகிறது.

அ.தி.மு.க.-தே.மு.தி.க. கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு இழுபறியாக இருந்து வரும் நிலையில், இன்று முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது.

தொடக்கத்தில் 25 தொகுதிகள் கேட்ட தே.மு.தி.க. பின்னர் அதனை 20 ஆக குறைத்தது. ஒரு மேல்சபை எம்.பி. தரவேண்டும் என்று தே.மு.தி.க. தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

அ.தி.மு.க. அமைச்சர்கள், தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும், சுமூக முடிவு எட்டப்படவில்லை.

இதற்கிடையில் தே.மு.தி.க.வுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை நிறைவு செய்ய அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. அ.தி.முக. தரப்பில் 15 தொகுதி வரை தருவதாக கூறப்பட்டது.

அதனை ஏற்கவில்லை. அதனால் இன்று மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி கையெழுத்திடுகிறார்கள்.

தே.மு.தி.க.வுக்கு 17 சீட்டு வரை ஒதுக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க. – தே.மு.தி.க. இடையே 10 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த தொகுதி பங்கீட்டு பிரச்சினை இன்று முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தொகுதி பங்கீடு கையெழுத்து இன்று ஏற்படுகிறது.

அதேபோல த.மா.கா.விற்கும் இன்று தொகுதி பங்கீடு நிறைவு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

த.மா.காவுக்கு 3 தொகுதி கொடுக்க அ.தி.மு.க. முன்வந்துள்ளது. இரு கட்சிகளுக்கும் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதித்து இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளன.

தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகள் எவை எவை எனவும் ஆய்வு செய்யப்பட்டது. அது அ.தி.மு.க. செல்வாக்கு மிக்க தொகுதியாக இருந்தால் விட்டு கொடுக்க வலியுறுத்தப்படுகிறது.

தே.மு.தி.க.வுக்கு தொகுதி பங்கீடு செய்யப்பட்டு விட்டதாகவும், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம் என்பதில் தான் இதுவரையில் சிக்கல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

அதுவும் இன்று மாலைக்குள் முடிவாகிவிடும் என்று அ.தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது. தே.மு.தி.க., த.மா.கா. தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்படுவதால் 2 நாட்களில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீட்டு தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட அ.தி.மு.க. தலைமை தீவிரம் காட்டி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »