Press "Enter" to skip to content

மேற்கு வங்காளத்தில் ஐந்தாம் கட்ட தேர்தல் – ஏப்ரல் 14 முதல் ராகுல் காந்தி பிரசாரம்

மேற்கு வங்காள மாநிலத்தில் இதுவரை நான்கு கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

புதுடெல்லி:

மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தல் 8 கட்டமாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 3 கட்டத் தோதல் நடைபெற்று முடிந்த நிலையில், 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்டத் தோதல் நேற்று நடைபெற்றது. அதில் 80.9 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தோதல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அங்கு ஐந்தாம் கட்டமாக 45 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 17-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 14 முதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கோல்போகர் மற்றும் மதிகாரா-நக்சல்பாரி ஆகிய இடங்களில் நடைபெறும் பேரணியில் பங்கேற்று அவர் உரையாற்றவுள்ளார்.

மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் 92 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »