Press "Enter" to skip to content

பாபா் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதிக்கு ‘லோக்ஆயுக்தா’ பணி

அரசு ஊழியர்கள் மற்றும் மந்திரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் சட்டப்பூர்வ அமைப்பாக மாநிலங்கள்தோறும் ‘லோக்ஆயுக்தா’ இயங்கி வருகிறது.

லக்னோ:

அரசு ஊழியர்கள் மற்றும் மந்திரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் சட்டப்பூர்வ அமைப்பாக மாநிலங்கள்தோறும் ‘லோக்ஆயுக்தா’ இயங்கி வருகிறது. உத்தரபிரதேசத்தில், ஒரு லோக்ஆயுக்தா தலைவரும், 3 துணைநிலை லோக்ஆயுக்தா தலைவர்களும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்தநிலையில், 3-வது துணைநிலை லோக்ஆயுக்தா தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.

அவருக்கு ‘லோக்ஆயுக்தா’ தலைவர் சஞ்சய் மிஸ்ரா நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றம் சாட்டப்பட்ட பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட அனைவரையும் அவர் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »