Press "Enter" to skip to content

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சுப்பிரமணிய சுவாமி மனுவுக்கு பதில் அளிக்க சோனியாவுக்கு கூடுதல் அவகாசம்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சாட்சியம் அளிக்க உத்தரவிடக் கோரி பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிநீதி மன்றம் நீதிபதி சுரேஷ் கெய்த் விசாரித்து வருகிறார்.

புதுடெல்லி:

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சாட்சியம் அளிக்க உத்தரவிடக் கோரி பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிநீதி மன்றம் நீதிபதி சுரேஷ் கெய்த் விசாரித்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி 22-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா உள்ளிட்டோர் ஏப்ரல் 12-ந் தேதிக்குள் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அதுவரை, விசாரணை கோர்ட்டில் நடைபெறும் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சோனியா காந்தி உள்ளிட்டோர் சார்பில் தருணும் சீமா ஆஜராகி, கொரோனா காரணமாக தங்களது அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால் பதில் அளிக்க முடியவில்லை. எனவே பதில் அளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்ற நீதிபதி, பதில் அளிக்க கூடுதல் அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை மே 18-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »