Press "Enter" to skip to content

‘குக்கூ’ பாடலுக்கு நடனமாடி அசத்திய மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள்

உலக செவிலியர் தினத்தையொட்டி, நர்சுகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சென்னை மருத்துவர் ரேலா ஆஸ்பத்திரி மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் ‘குக்கூ’ பாடலுக்கு நடனமாடி அசத்தினர்.

சென்னை:

உலக செவிலியர் தினத்தையொட்டி, நர்சுகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சென்னை மருத்துவர் ரேலா ஆஸ்பத்திரி மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் ‘குக்கூ’ பாடலுக்கு நடனமாடி அசத்தினர். இந்த காணொளி காட்சி சமூக வலைதளத்தில் மிகுதியாக பகிரப்பட்டு பரவுகிறது.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் ‘குக்கூ… குக்கூ…’ என்ற பாடல் மிகுதியாக பகிரப்பட்டு பரவி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. கோடிக்கணக்கான மக்கள் இந்த பாடலை பார்த்து ரசித்தனர். கொரோனா சூழலிலும் இந்த பாடல் பெரிதும் பேசப்பட்டது.

இந்தநிலையில் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கேரள காவல் துறையினர் நள்ளிரவில் சாலையில் நடனமாடினர். இந்த நடன காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வேக வேகமாக பரவியது. பல இடங்களில் இந்த பாடலுக்கு பல்வேறு தரப்பினரும் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சென்னை சென்டிரல் எம்.ஜி.ஆர். தொடர் வண்டி நிலையத்திலும் பெண் காவல் துறையினர் ‘குக்கூ’ பாடலுக்கு நடனமாடி கவனம் ஈர்த்தனர்.

இந்தநிலையில் உலக செவிலியர் தினத்தையொட்டி, முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. நிறுவிய, சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவர் ரேலா ஆஸ்பத்திரியில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ‘குக்கூ… குக்கூ…’ பாடலுக்கு நடனமாடி, நர்சுகளுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

மருத்துவர் ரேலா ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பெண் மருத்துவர் காவ்யா பாடிய, இந்த பாடல் காணொளி காட்சியில், ‘குக்கூ… குக்கூ… உயிரை காக்கும் தொழிலுக்கு…. குக்கூ… குக்கூ நர்சுகள் பண்ணும் சேவைக்கு… குக்கூ… குக்கூ… எதையும் தாங்கும் மனதுக்கு குக்கூ… குக்கூ… நர்சுகள் காக்கும் உயிருக்கு….குக்கூ… குக்கூ…’, என்பன போன்ற நம்பிக்கையூட்டும் வரிகள் பின்னணி ஒலிக்க நர்சுகளை வாழ்த்தி நடனம் ஆடுகிறார்கள்.

உயிரை காக்கும் சேவையில் ஈடுபடும் நர்சுகளின் சேவையை பாராட்டும் வகையிலும், நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இந்த பாடல் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவர் ரேலா ஆஸ்பத்திரி மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் நடனமாடும் இந்த ‘குக்கூ’ பாடல் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டு பரவி வருகிறது.

மேலும் உலக செவிலியர் தினத்தையொட்டி, உயிரை காக்கும் உன்னத தொழிலை சேவையாக ஏற்று வாழ்ந்து வரும் நர்சுகளுக்கு நன்றிக்கடன் செலுத்துவது போலவும் இந்த காணொளி காட்சி அமைந்துள்ளதாக பாராட்டுகள் குவிகின்றன.

இந்தநிலையில், மருத்துவர் ரேலா ஆஸ்பத்திரியின் தலைமை செயல் அதிகாரி மருத்துவர் இளங்குமரன் கலியமூர்த்தி உலக செவிலியர் தினத்தில், நர்சுகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »