Press "Enter" to skip to content

கொரோனா நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோய்

கொரோனா நோயாளிகளுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிற கருப்பு பூஞ்சை நோய் தாக்குவது தெரியவந்துள்ளது. இதற்கான மருந்து உற்பத்தியைப் பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி :

நாடு முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களைப் பாதித்து வருகிறது.

இந்த தருணத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான, குணமாகிற நோயாளிகளுக்கு, ‘மியூகோர்மைகோசிஸ்’ என்று அழைக்கப்படுகிற கருப்பு பூஞ்சைநோய் தாக்குவதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது ஒரு அரிதான மற்றொரு தொற்று நோய் ஆகும்.

இது, பொதுவாக மண், தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிற ஒருவகை பூஞ்சையால் உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்த நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகின்றன. இதுவும் உயிருக்கு ஆபத்தான நோய்தான்.

கொரோனா நோயாளிகளைப் பொறுத்தமட்டில், அவர்களுக்கு உயிரைக் காக்க தருகிற ஸ்டீராய்டு மருந்துகளால் இந்த நோய் தூண்டப்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஸ்டீராய்டுகளைப் பொறுத்தமட்டில், அவை கொரோனா நோயாளிகளின் நுரையீரல் வீக்கத்தை குறைத்து,கொரோனாவை எதிர்த்துப்போராட உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அதிகளவில் செயல்படுகிறபோது, ஏற்படுகிற சில சேதங்களை தடுக்கின்றன. ஆனால் அவை நோய் எதிர்ப்புச்சக்தியை குறைத்து, நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு இல்லாத பிற கொரோனா நோயாளிகளின் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரித்து விடுகின்றன.

நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதுதான் கொரோனா நோயாளிகளின் மியூகோர்மைகோசிஸ் பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நோய் தாக்குதல் பற்றிய தகவல்களை அறிந்ததும் இதற்கான மருந்து தயாரிப்பை அதிகரிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று நோய்க்கு மத்தியில் இப்போது கருப்புபூஞ்சை நோய் பரவல் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »