Press "Enter" to skip to content

அப்படி செய்தால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் -தலைமை தேர்தல் அதிகாரி

விரைந்து வாக்குப்பதிவை நடத்தவும், வாக்காளர்களின் வசதிக்காகவும் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை:

தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் வழங்கும் சட்டப்பிரிவை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில்,  ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
விரைந்து வாக்குப்பதிவை நடத்தவும், வாக்காளர்களின் வசதிக்காகவும் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று கூறிய அவர்,  இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தனது மனுவில் கூறி உள்ளார்.

இதையடுத்து வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »