Press "Enter" to skip to content

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா 3-வது அலை தாக்கும் – கான்பூர் ஐ.ஐ.டி. நிபுணர்கள் கணிப்பு

கொரோனா 3-வது அலை அக்டோபர் மாதம் உச்சம் தொடும். ஆனால், 2-வது அலையின் உச்சத்தை விட குறைவாக இருக்கும் என்பது முதல் காட்சி ஆகும்.

கான்பூர்:

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யை சேர்ந்த நிபுணர்கள், கொரோனா 3-வது அலை குறித்து கணித்துள்ளனர். இதுதொடர்பாக அக்குழுவில் இடம்பெற்ற ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் ராஜேஷ் ரஞ்சன், மகேந்திர வர்மா ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா 2-வது அலையின் தாக்கம், சில வடகிழக்கு மாநிலங்களை தவிர, மற்ற மாநிலங்களில் தணிந்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது.

எப்படியும், ஜூலை 15-ந்தேதி வாக்கில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு விடும்.

கொரோனா 3-வது அலை குறித்து ஆட்சியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே கவலை நிலவி வருவதால், நாங்கள் எஸ்.ஐ.ஆர். மாதிரியை பயன்படுத்தி கணித்தோம். 2-வது அலையில் தொற்றின் வீச்சு அடிப்படையில் 3 விதமான காட்சிகளை கட்டமைத்துள்ளோம்.

3-வது அலை அக்டோபர் மாதம் உச்சம் தொடும். ஆனால், 2-வது அலையின் உச்சத்தை விட குறைவாக இருக்கும் என்பது முதல் காட்சி ஆகும். செப்டம்பர் மாதத்திலேயே 3-வது அலை தோன்றி விடும், ஆனால், 2-வது அலையை விட அதிக உச்சத்தை தொடும் என்பது இரண்டாவது காட்சி ஆகும்.

சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளால், அக்டோபர் மாதத்தின் இறுதிக்கு 3-வது அலை தள்ளிப்போகலாம். அதன் தாக்கம், 2-வது அலையை விட குறைவாக இருக்கும் என்பது மூன்றாவது காட்சி ஆகும்.

கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க தடுப்பூசிதான் முக்கிய ஆயுதம். தடுப்பூசி பணியால் உச்சம் தொடுவது கணிசமாக குறையும். ஆனால், தடுப்பூசியை கணக்கில் கொள்ளாமல் இந்த கணிப்பை செய்துள்ளோம். இனி, தடுப்பூசியையும் கணக்கில் கொண்டு அடுத்த கணிப்பை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »