Press "Enter" to skip to content

கொரோனா காலத்தில் மத்திய-மாநில அரசுகளின் நல்லுறவால் சீர்திருத்தங்கள் அமல் – நரேந்திர மோடி பெருமிதம்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்துக்கு பதிலாக நேரடி பணப்பலன் வழங்குதல் உள்ளிட்ட சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டி இருந்தது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி:

கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதையும் மீறி, இந்திய மாநிலங்கள் கடந்த 2020-2021 நிதியாண்டில் கூடுதலாக ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் கோடி கடன் பெற்றன. இதற்குமத்திய-மாநில அரசுகள் இடையிலான நல்லுறவே காரணம்.

கொரோனா பின்னணியில் பொருளாதார திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஒரே அளவை எல்லோருக்கும் பொருந்த செய்கிற தீர்வை பின்பற்றக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இது சவாலாகத்தான் இருந்தது.

கடந்த ஆண்டு மே மாதம் தற்சார்பு இந்தியா (ஆத்ம நிர்பார்) நிதி தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது, மாநிலங்கள் கூடுதலாக கடன் பெற அனுமதிக்கப்படும் என்று அறிவித்தோம். அதற்கு 4 சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

‘ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தின்கீழ் ரேஷன் அட்டைகளில் ஆதார் எண் இணைத்தல், ஞாயவிலைக்கடைகளில் ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவியை பயன்படுத்துதல், வர்த்தகம் செய்ய உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துதல், விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்துக்கு பதிலாக நேரடி பணப்பலன் வழங்குதல் உள்ளிட்ட சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டி இருந்தது.

இவற்றை அமல்படுத்திய 23 மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் கோடி கடன் கிடைத்தது. முன்பெல்லாம் நிர்பந்தத்தின் பேரில், சீா்திருத்தம் வந்தது. ஆனால், கொரோனா காலத்தில், மக்களுக்கு உதவும் உறுதிப்பாடு மற்றும் ஊக்கத்தொகை அடிப்படையில் சீா்திருத்தம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் அவர் கூறியுள்ளார்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »