Press "Enter" to skip to content

வனப்பகுதியில் யானையை எதிர்த்து நின்ற காளைமாடு

சத்தியமங்கலம் வனப்பகுதியில் எதிரே வந்த யானையை காளைமாடு ஒன்று எதிர்த்து நின்று துரத்தும் காட்சி சமூக வலைத்தளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு யானை, மான், புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் மாதேஷ் என்ற வாலிபர் வனப்பகுதிக்குள் தனது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு காட்டு யானை எதிரே வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாதேஷ் சுதாரித்துக்கொண்டு மாடுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு தப்ப முயன்றார்.

அப்போது அவர் வளர்த்து வரும் காளைமாடு ஒன்று யானையை நோக்கி ஆவேசமாக பார்த்தது. பின்னர் யானையை எதிர்த்து நின்று துரத்த ஆரம்பித்தது. இதையடுத்து யானை மெதுவாக வனப்பகுதிக்குள் செல்ல ஆரம்பித்தது. இதனை மாதேஷ் தனது செல்போனில் காணொளி எடுத்தார். தற்போது இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »