Press "Enter" to skip to content

உலக சோதனை சாம்பியன்ஷிப்: இந்திய அணி செய்த சில தவறுகள்… ஒரு அலசல்

முதல் பந்துவீச்சு சுற்றில் 26 சுற்றுகள் வீசி 57 ரன்களும், 2-வது பந்துவீச்சு சுற்றில் 10.4 சுற்றுகள் வீசி 35 ரன்களும் விட்டுக்கொடுத்த பும்ராவால் ஒரு மட்டையிலக்கு கூட வீழ்த்த முடியவில்லை.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்து சவுத்தம்டனில் நடைபெற்றது.

இங்கிலாந்தில் போட்டி என்றதுமே, இந்தியாவுக்கு ஆகாது என்பது தேதி அறிவித்த அன்றைக்கே ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் தெரிந்த விஷயம் என்றாலும், நியூசிலாந்து கூட போட்டியிடும் என நினைச்சாங்க.

போட்டியும் 18-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கெத்தாக போட்டிக்கு முந்தைய நாளே இந்திய அணி ஆடும் லெவனை அறிவித்தது.

ஆடும் லெவனில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, இஷாந்த், பும்ரா ஆகியோர் இடம் பிடித்ததால் விமர்சகர்களும், ரசிகர்களும் இங்கிலாந்தில் இந்தியா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், இன்-ஸ்விங் வேகப்பந்து 

வீச்சாளர்கள் இல்லாமல் களம் இறங்கப் போகிறதே, என்ன பாடுபடப் போகிறதோ என முணுமுணுத்தனர். இருந்தாலும் நன்றாக வெயில் அடித்தால் 4-வது மற்றும் ஐந்தாவது நாள் சுழற்பந்து வீச்சாளர்கள் அசத்துவார்கள் என சின்ன திருப்தி.

நியூசிலாந்து தந்திரமாக ஆடும் லெவனை அறிவிக்கவில்லை. அந்த அணி 4 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட இருந்தது.

திடீரென வியாழக்கிழமை இரவில் இருந்து பெய்த மழை, போட்டி தொடங்கும் வெள்ளிக்கிழமையும் விடவில்லை. 

மேலும் நான்கு நாட்கள் சவுத்தம்டனில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

உடனே விமர்சகர்கள், இந்தியா ஆடும் லெவனை மாற்றலாம். முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் போன்ற இன்-ஸ்விங் பந்து வீச்சாளர்களை களம் இறக்கலாம். இரண்டு ஸ்பின்னர்கள் தேவையில்லை என்றார்கள்.

ஆனால், அணி நிர்வாகம் நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போன்று அதே ஆடும் லெவன் அணியோடு களம் இறங்கியது. இந்திய அணி செய்த முதல் தவறு இதுதான்.

ஆனால் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளரை களம் இறக்காமல் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. 

டாஸ் நம்ம கையில் இல்லங்க.. மேலும், டாஸ்க்குக்கும் விராட் கோலிக்கும் எதிரும் புதிரும் என்பதால் அதில் தோல்வி.

மிகவும் கடினமான ஆடுகளத்தில் ரோகித் சர்மா- சுப்மான் கில் ஜோடி 20.1 ஓவர் வரை தாக்குப்பிடித்து 62 ஓட்டங்கள் சேர்த்தார்கள்.

விராட் கோலி, ரஹானே தாக்குப்பிடித்து விளையாடினர். ரிஷாப் பண்ட் 4 ஓட்டத்தில் தேவையில்லாமல் வெளியில் சென்ற பந்தை அடித்து அவுட்டானார். இந்திய அணியின் 2-வது மிகப்பெரிய தவறு இதுதான். ரிஷாப் பண்ட் நிலைத்து நின்றிருக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல… பொறுமையாக விளையாடிய ரஹானே 49 ஓட்டத்தில் தேவையில்லாமல் டீப் மிட்மட்டையிலக்கு நோக்கி புல்ஷாட் அடிக்க ஆசைப்பட மிட்மட்டையிலக்குடில் கேட்ச் கொடுத்து தேவையில்லாமல் ஆட்டமிழந்தது இந்தியாவின் அடுத்த தப்பு.

வழக்கம்போல் டெய்லெண்டர்ஸ்களாக கருதப்படும் கடைசி 4 மட்டையிலக்கு 35 ரன்னுக்குள் போக இந்தியா 217 ஓட்டத்தில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்.

நியூசிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றில் முதல் மட்டையிலக்குடுக்கு 34.2 சுற்றுகள் விளையாடிவிட்டது. பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோரால் நியூ பாலில் ஒன்றும் செய்ய முடியவில்லை. மூன்று பேரும் இன்-ஸ்விங் செய்யமாட்டார்கள். 

அப்போதுதான் இந்திய அணி, ஸ்விங் பவுலரை தேர்வு செய்யாதது தவறு என உணர்ந்தது.

நியூசிலாந்து அணி வீரர்கள்

அஸ்வின் முதல் மட்டையிலக்குடை வீழ்த்த, அதன்பின் நியூசிலாந்து ஆட்டம் காண ஆரம்பித்தது. 162 ரன்னிற்குள் 6 மட்டையிலக்குடை இழந்த நியூசிலாந்து எப்படியும் 200-க்குள் ஆல்-அவுட் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து டெய்லெண்டர்ஸ்கள் கடைசி நான்கு மட்டையிலக்குடுக்கு 87 ஓட்டங்கள் எடுத்துவிட்டனர். இவர்களை அடிக்க விட்டதுதான் இந்தியாவிற்கு மிகப்பெரிய இழப்பு. அத்துடன் நியூசிலாந்து 32 ஓட்டங்கள் லீட் வைத்துவிட்டது.

கடைசி நாளான நேற்று வெயில் நன்றாக இருந்தது. ஆகவே, ஸ்விங் பெரிய அளவில் இல்லை. ஆனால் நியூசிலாந்து பவுலர்கள் பவுன்சர், குட் லெந்த் யுக்தியை கடைபிடித்து விராட் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோரை சொற்ப ஓட்டங்களில் சாய்த்துவிட்டனர்.

ரிஷாப் பண்ட் 4 ஓட்டத்தில் அவுட்டாவதில் இருந்து தப்பினார். அதன்பின் முழு பொறுப்பும் அவர் மீது விழுந்தது. அவரும் அணியை சரியான திசையில் எடுத்துச் சென்றார். நியூசிலாந்து பவுலர்களால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

41 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டிரென்ட் பவுல்ட் வீசிய பந்தை லாங்-ஆன் திசையில் தூக்கி அடிக்க முயற்சி செய்து தேவையில்லாமல் ஆட்டமிழந்தார். இது மிகப்பெரிய தவறு.

ரிஷாப் பண்ட் கூடுதலாக ஐந்து சுற்றுகள் நின்றிருந்தால் போட்டியின் நிலையே மாறியிருக்கும். அதன்பின் என்ன?.. 14 ரன்னுக்குள் கடைசி 3 மட்டையிலக்குடை இழக்க இந்தியா 170 ஓட்டத்தில் சுருண்டது.

138 ஓட்டங்கள் மட்டுமே முன்னிலைப் பெற முடிந்தது. 2-வது பந்துவீச்சு சுற்றுசிலும் அஸ்வினால்தான் மட்டையிலக்கு வீழ்த்த முடிந்தது. வேகப்பந்து வீச்சாளர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

போட்டி விறுவிறுப்பாகத்தான் சென்று கொண்டிருந்தது. நியூசிலாந்து 84 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது பும்ரா பந்தில் ராஸ் டெய்லர் எளிதாக முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த புஜாராவிடம் கேட்ச் கொடுத்தார். அல்வா மாதிரியான கேட்சை புஜாரா தவறவிட்டார். அவர் தவற விட்டது கேட்சை மட்டுமல்ல. இந்தியாவின் போட்டியையும்தான்.

அப்போது நியூசிலாந்துக்கு 55 ஓட்டங்கள் தேவையிருந்தது, புது பேட்ஸ்மேன் வந்திருந்தால் பந்துகளை வேஸ்ட் செய்ய வைத்திருக்கலாம். இந்தியாவின் அடுத்த மிகப்பெரிய தவறு இது. 

கடைசி ஒரு மணி நேரம் அல்லது 15 ஓவர் இதில் 35 ஓட்டங்கள் நியூசிலாந்துக்கு தேவைப்பட்டது. ஒரு மணி நேரத்தில் 12  சுற்றுகள் வீசலாம். சோதனை போட்டியில் 12 சுற்றில் 35 ஓட்டங்கள் எளிதானது அல்ல. லெக் சைடு சென்றால் வைடு கிடையாது. லெக் சைடு பந்துகளை தொடர்ச்சியாக வீசி போட்டியை டிரா ஆக்க முயற்சி செய்திருக்கலாம். ஆனால் 7.5 சுற்றில் இலக்கை எட்ட வைத்து விட்டார்கள். இதற்கிடையில் 12 ஓட்டங்கள் தேவை என்றபோது, பும்ரா கேன் வில்லியம்சன் கொடுத்த கேட்சை பிடிக்க தவறிவிட்டார்.

இந்த தவறுகள் எல்லாம் சேர்ந்து உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்துவிட்டது.

போட்டி தொடங்குவதற்கு ஒருவாரத்திற்கு முன்னதாகவே டுவிட்டரில் பும்ரா வேண்டாம். முகமது சிராஜ்-யை அணியில் சேருங்கள் என வலையொட்டு (ஹேஷ்டேக்) உருவாக்கி மிகுதியாக பகிரப்பட்டது ஆக்கினார்கள். அது இந்திய அணி நிர்வாகத்தின் கண்ணில் படவில்லை.

முதல் பந்துவீச்சு சுற்றில் 26 சுற்றுகள் வீசி 57 ரன்களும், 2-வது பந்துவீச்சு சுற்றில் 10.4 சுற்றுகள் வீசி 35 ரன்களும் விட்டுக்கொடுத்த பும்ராவால் ஒரு மட்டையிலக்கு கூட வீழ்த்த முடியவில்லை. இரண்டு பந்துவீச்சு சுற்றுசிலும் டக் அவுட். இதுதான் மிச்சம்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »