Press "Enter" to skip to content

2 ஜிபி இலவச தரவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – கமல்ஹாசன் வலியுறுத்தல்

ஏழை மாணவர்கள் நலன் கருதி கணினிமய வகுப்பில் பங்கேற்பதற்காக 2 ஜிபி தரவு இலவசமாக வழங்கும் திட்டத்தை கடந்த அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது.

சென்னை:

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கணினிமய வகுப்பில் பங்கேற்க கடந்த அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த 2 ஜிபி இலவச தரவு திட்டத்தால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்தனர்.

அந்தத் திட்டம் தற்போது முடிவடைந்திருப்பதால் மாணவர்கள் கணினிமய வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிலும் கணினிமய வகுப்பு முறையே தொடரும் நிலையில், இலவச 2 ஜிபி தரவு திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், 2 ஜிபி இலவச தரவு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வகுப்புகள் இணைய வழியிலே நடக்கும் சூழல் இருப்பதால், 2 ஜிபி இலவச தரவு திட்டம் செயல்படுத்த வேண்டும் எனும் மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. கல்வி நிலையங்கள் திறக்கும் வரை தமிழக அரசு இலவச தரவு வழங்க வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »