Press "Enter" to skip to content

3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்களை கொண்டு சாய்பாபாவுக்கு அலங்காரம்

சாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முகக்கவசங்கள், 2 ஆயிரம் சானிடைசர் பாட்டில்கள் மற்றும் உணவு தானியங்கள், பழங்கள், இதர உணவு பொருட்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.

கர்நாடகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் 3-வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வருகிறார்கள். இதனால் மக்கள் ஆதங்கத்தில் இருந்து வருகிறார்கள். மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து வருகிறார்கள். இருப்பினும் கொரோனா 3-வது அலை பாதிப்பு குறித்த அச்சம் மக்களிடையே இருந்து வருகிறது.

இந்த் நிலையில் பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் கொரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும், 3-வது அலை உருவாகாமல் இருக்கவும் வேண்டி சாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முகக்கவசங்கள், 2 ஆயிரம் சானிடைசர் பாட்டில்கள் மற்றும் உணவு தானியங்கள், பழங்கள், இதர உணவு பொருட்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வேண்டி வழிபட்டனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த 4 தினங்களாக சாய்பாபாவுக்கு இந்த விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. கொரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும், 3-வது அலை உருவாகாமல் இருக்கவும் வேண்டி இந்த சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடத்தப்பட்டது. இதில் தேஜஸ்வி சூர்யா எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டு சாமி பார்வை செய்தனர்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »