Press "Enter" to skip to content

பிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி சந்திப்பு

இந்திய-அமெரிக்க ராணுவ உறவை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ள ஜோ பைடனின் எண்ணத்தை வரவேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தடைந்தார். நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்தார்.

இதுபற்றி ‘டுவிட்டர்’ தளத்தில் குறிப்பிட்ட மோடி, இந்திய-அமெரிக்க ராணுவ உறவை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ள ஜோ பைடனின் எண்ணத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் ஆண்டனி பிளிங்கன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆப்கானிஸ்தான் நிலவரம், ‘குவாட்’ அமைப்பை வலுப்படுத்துதல், கொரோனா நிலவரம் ஆகியவை குறித்து பேசப்பட்டது.

பின்னர், நிருபர்களை சந்தித்த ஆண்டனி பிளிங்கன், தடுப்பூசி பணியை தீவிரப்படுத்த இந்தியாவுக்கு ரூ.187 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »