Press "Enter" to skip to content

டெல்லி காவல் துறை கமிஷனராக ராகேஷ் அஸ்தானா பொறுப்பேற்பு

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், புதிய காவல் துறை கமிஷனர் அதிரடி நடவடிக்கை எடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி:

குஜராத் பிரிவை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் அஸ்தானா. எல்லை பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரலாக இருந்த அவரை தலைநகர் டெல்லியின் காவல் துறை கமிஷனராக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இதனையடுத்து அவர் டெல்லி ஜெய் சிங் மார்க்கில் உள்ள காவல் துறை தலைமை அலுவலகத்தில் காவல் துறை கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக அவருக்கு காவல் துறை படையினர் அணிவகுப்புடன் வரவேற்பு அளித்தனர். வருகிற 31-ந் தேதியுடன் அவர் ஓய்வுபெற இருந்த நிலையில் அவருக்கு ஒரு வருடம் பணி நீட்டிப்பு அளித்து மத்திய அரசு இந்த புதிய பதவியில் அவரை அமர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராகேஷ் அஸ்தானர் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனராக இருந்தபோது, அப்போதைய சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மா இருந்தார். இருவரும் ஒருவரை பற்றி மற்றொருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இருவரும் அவர்களது பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், புதிய காவல் துறை கமிஷனர் அதிரடி நடவடிக்கை எடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »