Press "Enter" to skip to content

ஜனாதிபதி, தமிழகத்தில் 5 நாள் சுற்றுப்பயணம் – கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்கிறார்

ஆகஸ்டு 2-ந்தேதி புதுடெல்லியில் இருந்து புறப்படும் ஜனாதிபதி 6-ந்தேதி வரை 5 நாட்கள் தமிழகத்தில் தங்கியிருக்கிறார். அவரது சுற்றுப்பயண விவரம் வெளியாகி உள்ளது.

சென்னை:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வருகிற 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை தமிழகத்தில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழக சட்டசபையில் கருணாநிதி உருவப்படத்தை 2-ந்தேதி அவர் திறந்து வைக்கிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ள சட்டசபை நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி, ஊட்டி வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் கல்லூரியில் நடைபெறும் விழா ஆகியவற்றில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்.

வருகிற 2-ந்தேதி புதுடெல்லியில் இருந்து புறப்படும் ஜனாதிபதி 6-ந்தேதி வரை 5 நாட்கள் தமிழகத்தில் தங்கியிருக்கிறார். அவரது சுற்றுப்பயண விவரம் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஆகஸ்டு 2-ந்தேதி காலை 9.35 மணிக்கு புதுடெல்லி ஜனாதிபதி மாளிகையில் இருந்து புறப்பட்டு காலை 9.50 மணிக்கு விமான நிலையம் வருகிறார்.

அங்கிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு பகல் 12.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். இதன்பின்பு, பகல் 1.10 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை செல்கிறார்.

அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு மாலை 4.35 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள சட்டசபை நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் அங்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதன்பின்பு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ஆளுநர் மாளிகை சென்றடைந்து இரவு அங்கு தங்குகிறார்.

6-ந்தேதி காலை 10.30 மணிக்கு ஊட்டி ராஜ்பவனில் இருந்து புறப்பட்டு 10.50 மணிக்கு ஊட்டி உலங்கூர்தி தளத்துக்கு வந்தடைகிறார். அங்கிருந்து உலங்கூர்தி மூலம் பகல் 11.25 மணிக்கு கோவை சூலூர் விமான நிலையம் வந்தடையும் ஜனாதிபதி, 11.35 மணிக்கு விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

பகல் 2.30 மணிக்கு டெல்லி விமான நிலையம் வந்தடையும் அவர், 2.55 மணிக்கு ஜனாதிபதி மாளிகையை சென்றடைகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »