Press "Enter" to skip to content

பாராளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கவில்லை எங்கள் கடமையைத்தான் செய்கிறோம் – ராகுல்காந்தி

பெகாசஸ்’ உளவு பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் அல்லது மத்திய உள்துறை மந்திரி முன்னிலையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

பாராளுமன்ற நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் சீர்குலைக்கவில்லை. எங்கள் கடமையைத்தான் செய்கிறோம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

‘பெகாசஸ்’ உளவு விவகாரத்தில், பாராளுமன்றத்தை செயல்பட விடாமல் தடுப்பதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருந்தார்.

இந்தநிலையில், இக்குற்றச்சாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கவில்லை. தங்கள் கடமையைத்தான் செய்கின்றன. ‘பெகாசஸ்’ உளவு விவகாரம், எங்களை பொறுத்தவரை தேசியம், தேசதுரோகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும். இது, தனியுரிமை தொடர்புடையது.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. ‘பெகாசஸ்’ மென்பொருளை வாங்கினீர்களா? இந்தியர்களை உளவு பார்த்தீர்களா? என்றுதான் கேட்கிறோம்.

இந்த பிரச்சினையில், இந்திய ஜனநாயகத்தின் ஆன்மா மீது பிரதமரும், மத்திய உள்துறை மந்திரியும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

ஆகவே, ‘பெகாசஸ்’ உளவு பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் அல்லது மத்திய உள்துறை மந்திரி முன்னிலையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. இதில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »