Press "Enter" to skip to content

48 சதவீத பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை- கருத்துக்கணிப்பில் தகவல்

மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், அரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில் பகுதியளவில் இந்த மாதம் பள்ளிக்கூடங்களை திறந்துள்ளனர்.

புதுடெல்லி:

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வர நாடு போராடிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடிய பள்ளிக்கூடங்களை எப்போது திறப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற கணினிமய தளம் நாட்டின் 361 மாவட்டங்களில், 32 ஆயிரம் பெற்றோரிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அது வருமாறு:-

* 30 சதவீத பெற்றோர், தங்கள் மாவட்டங்களில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வந்து விட்டால் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப தயார் என்று கூறுகின்றனர்.

* 21 சதவீத பெற்றோர், பள்ளிக்கூடங்கள் எப்போது திறக்கின்றனவோ அப்போது தங்கள் குழந்தைகளை அனுப்புவதற்கு தயார் என்கிறார்கள்.

* 48 சதவீத பெற்றோர், கொரோனாவுக்கு எதிராக தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுகிற வரையில், அவர்களை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப தயாராக இல்லை என தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் பா.ஜ.க. எம்.பி.க்களிடம் பேசுகையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது விரைவில் தொடங்கி விடும் என தெரிவித்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

இதற்கிடையே மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், அரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில் பகுதியளவில் இந்த மாதம் பள்ளிக்கூடங்களை திறந்துள்ளனர். ராஜஸ்தான், இமாசலபிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் ஆகஸ்டு மாதம் முதல் வாரம் பள்ளிக்கூடங்களை திறக்கப்போவதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »