Press "Enter" to skip to content

ஜப்பானில் விசித்திரம் – ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் இளைஞர்

கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் இளைஞர் ஜப்பானில் வசித்து வருகிறார்.

டோக்கியோ:

ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் தைசுகே ஹோரி (36).  இவர் ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர் அசோசியேஷன் தலைவராக பதவி வகித்து வருகிறார். 

கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே இவர் தூங்குகிறாராம். இதனால் மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதாக ஹோரி கூறுகிறார். மேலும், தூங்கும் நேரத்தை எப்படி குறைப்பது என்பது  குறித்து நூற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்து வருகிறாராம்.

இதுதொடர்பாக, தைசுகே ஹோரி கூறியதாவது:

எல்லாரையும் போல நானும் 8 மணி நேரம் தூங்கிக்கொண்டு இருந்தேன். ஆனால் பல வேலைகள் பாதித்தன. எனவே தூங்கும் நேரத்தை குறைக்கத் தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறேன். சில நாட்களில் அரை மணி நேரத்துக்கும் குறைவாகக்கூட தூங்குகிறேன். இதனால் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »