Press "Enter" to skip to content

தமிழகத்தில் இன்று மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் – 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் ழுழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை:

தமிழகத்தின் இன்று மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் 200 வார்டுகளில் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், 12.9.2021 அன்று 1600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, 98,227 முதல் தவணை தடுப்பூசிகள், 93,123 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 1,91,350 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் போது பொது மக்களும் ஆர்வமுடன் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு அதிகளவில் பயன் அடைகின்றனர். எனவே, இதுபோன்ற தீவிர தடுப்பூசி முகாம்களை வாரந்தோறும் நடத்த தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியதன் அடிப்படையில் இன்று (19-ம் தேதி) சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மொத்தம் 1,600 தீவிர கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும், கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் இந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்தி பயன் அடையலாம்.

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega-det.jsp என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044 2538 4520, 044 4612 2300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.

பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் இந்தத் தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »