Press "Enter" to skip to content

ஐபிஎல் 2021- போட்டிகளை நேரில் கண்டுகளிக்கும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள்

ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் சார்ஜா மைதானத்திற்கு செல்ல 16 வயதுக்கு உட்பட்ட ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

துபாய்:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளை ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

இந்நிலையில், ரசிகர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, துபாய் மைதானத்திற்கு செல்லும் ரசிகர்கள் கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொண்டு செல்ல தேவையில்லை. ஆனால், கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன், கட்டாயம் மக்கள் விரும்பத்தக்கதுக் அணிந்திருக்க வேண்டும். 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தியிருப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சார்ஜா மைதானத்தைப் பொருத்தவரை, 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழுடன், 48 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை சான்றிதழை கொண்டு வரவேண்டும்.

இதேபோல் அபுதாபி மைதானத்திற்கு வரும் ரசிகர்களில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ், கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 12 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் தேவையில்லை, ஆனால், கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வரவேண்டும். 12 வயதிற்கு உட்பட்டவர்கள், 21 வயதுக்கு மேற்பட்ட ஒருவரின் துணையுடன் வரவேண்டும். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »