Press "Enter" to skip to content

பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் குத்துச்சண்டை வீரர் போட்டியிட விருப்பம்

பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் குத்துச்சண்டை வீரர் மேனி பக்கியாவ் போட்டியிட உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மணிலா:

உலக அளவில் மிகவும் பிரபலமான குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரான மேனி பக்கியோவ் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். 42 வயதான பக்கியோவ் குத்துச்சண்டையில் உலக அளவில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.

மேனி பக்கியோவ் 2010-ம் ஆண்டு முதல் பிலிப்பைன்ஸ் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். 

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளேன் என குத்துச்சண்டை வீரர் மேனி பக்கியாவ் அறிவித்துள்ளாா்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் ஒரு குத்துச்சண்டை வீரன். களத்தில் மட்டுமில்லாமல் களத்துக்கு வெளியிலும் நான் போராடுவேன். பிலிப்பைன்சில் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறாா்கள். அவா்களது ஆதரவுடன் ஆட்சி அமைப்பேன் என தெரிவித்துள்ளார். 

பக்கியாவ் சாா்ந்துள்ள பிடிபி-லபான் கட்சியின் மற்றொரு அணி, தற்போதைய அதிபா் ரோட்ரிகோ டுடோதேவை துணை அதிபராக முன்மொழிந்துள்ளது. அதற்கு டுடோதேவும் சம்மதம் தெரிவித்துள்ளாா்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »