Press "Enter" to skip to content

சோமேட்டோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் அதிகமாக பகிரப் படும்

சோமேட்டோவில் உணவு வாங்கிய தமிழர் ஒருவரிடம், ‘இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள்’ என்று அந்நிறுவனத்தின் கஸ்டமர் கேர் கேட்டது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இந்திய அளவில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஸ்விக்கி, சோமேட்டோ ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் இருந்துவருகின்றன. இந்தநிலையில், சோமேட்டோ நிர்வாகம் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்பவர் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘சோமேட்டோவில் உணவு வாங்கியேன். அதில், நான் வாங்கிய உணவு முழுமையாக இல்லாமல் இருந்தது. இதுகுறித்து சோமேட்டோ கஸ்டமர் கேரைத் தொடர்பு கொண்ட போது, பணம் திரும்பக் கிடைக்காது. உங்களால் இந்தியில் பிரச்சனையை விளக்கமுடியவில்லை. ஒரு இந்தியராக இருந்துகொண்டு இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது.’

இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ள விகாஷ், கஷ்டமர் கேர் உடனான ஸ்கிரீன்ஷாட்டையும் பதிவிட்டுள்ளார். அதனையடுத்து, #Reject_Zomato என்ற வலையொட்டு (ஹேஷ்டேக்) டுவிட்டரில் மிகுதியாக பகிரப்பட்டது.

இதற்கிடையே, ‘இந்தி நாட்டின் தேசிய மொழி என்றும் அதை கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று வாடிக்கையாளரிடம் கூறிய விவகாரம் தொடர்பாக சோமேட்டோ நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »