Press "Enter" to skip to content

உத்தரபிரதேசத்தில் முதல் ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கம் கண்டுபிடிப்பு

கான்பூரில் சந்தேகத்திற்குரிய 20 பேரிடம் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கான்பூர்:

கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டபோது கேரளாவில் ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலும் காணப்பட்டது. கேரள சுகாதாரத்துறை கடுமையாக போராடி ஜிகா வைரசை கட்டுப்படுத்தியது.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் முதல் முதலாக ஒருவருக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கம் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கான்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வரும் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை நோய் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவரது ரத்தம் புனேயில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதித்து பார்க்கப்பட்டது.

அந்த அதிகாரியின் உடலில் பல்வேறு நோயின் அறிகுறிகள் இருந்ததால் எத்தகைய நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அந்த அதிகாரிக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கம் இருப்பதை நிபுணர்கள் உறுதி செய்தனர்.

இதன் மூலம் உத்தரபிரதேசத்தில் முதன் முதலாக ஒருவருக்கு இந்த பருவத்தில் ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மேலும் பரவாமல் இருக்க கான்பூர் மாவட்டம் முழுவதும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டன.

கான்பூரில் சந்தேகத்திற்குரிய 20 பேரிடம் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் முடிவுக்கு பிறகே ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கான்பூரில் பரவி இருக்கிறதா என்பது தெரிய வரும்.

இதையும் படியுங்கள்…கேரளாவில் மீண்டும் அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு- 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »