Press "Enter" to skip to content

சசிகலாவை கட்சியில் சேர்க்கலாமா? -ஓபிஎஸ் கருத்துக்கு ஜெயக்குமார் பதில்

எம்ஜிஆர் நினைவில்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் என, தனது பெயரில் கல்வெட்டை திறந்து வைத்த சசிகலா, அதிமுகவில் இணையும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

சென்னை:

சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தபிறகு, சசிகலாவின் அரசியல் பிரவேசம் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. சமீபத்தில் அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் அண்ணா சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்தினார். எம்ஜிஆர் நினைவில்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் என, தனது பெயரில் கல்வெட்டை திறந்து வைத்தார். இதன்மூலம் அதிமுகவில் இணையும் தனது விருப்பத்தை சசிகலா வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், அதிமுக தலைமை ஏற்பதாக இல்லை.

இந்நிலையில், கட்சியில் இரட்டை தலைமை குறித்த கேள்விக்கும், சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றிய கேள்விக்கும் பதிலளித்த ஓபிஎஸ், அதிமுக தொண்டர்களின் இயக்கம், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று பதிலளித்தார்.

ஓபிஎஸ் கருத்து பற்றி அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கூறுகையில், “சசிகலாவை எதிர்த்துதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். சசிகலாவுடன் அதிமுகவினர் எந்தவித தொடர்பும் வைக்க கூடாது என கூறியவர் ஓபிஎஸ்’ என்றார்.

சசிகலாவை நீக்கியது பொதுக்குழுவை கூட்டி எடுக்கப்பட்ட முடிவு. சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் ஜெயக்குமார் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »