Press "Enter" to skip to content

ஒமிக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அதிக பாதிப்பை ஏற்படுத்தும்- உலக சுகாதார நிறுவனம் தகவல்

ஏற்கனவே போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் ஒமிக்ரானை கட்டுப்படுத்துமா? என்பதை கண்டறிய பல வாரங்கள் தேவைப்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெனிவா:

ஒமிக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவுதல் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஒமிக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய் எதிர்ப்பு திறனில் இருந்து தப்பிக்கும் தன்மை கொண்டதாக இருக்கலாம். மேலும் இதன் பரவுதல் வேகமும் அதிகரிக்கும். எனவே இது அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளது.

அது எங்கு அதிகமாக பரவுகிறது என்பதன் அடிப்படையில் அதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம். ஒமிக்ரானால் உலக அளவில் அதிக ஆபத்து ஏற்பட்டு இருப்பது ஆரம்ப கட்ட ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் ஒமிக்ரான் தொடர்பாக இன்னும் முழுமையாக ஆய்வுகள் நடத்தப்படவில்லை. எனவே இதன் பாதிப்பு தொடர்பாக நிச்சயமற்ற அம்சங்கள் இருக்கின்றன.

ஏற்கனவே போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் ஒமிக்ரானை கட்டுப்படுத்துமா? என்பதை கண்டறிய பல வாரங்கள் தேவைப்படும்.

தென் ஆப்பிரிக்காவில் அதிகம் பேருக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கு ஒமிக்ரான் தான் காரணமா என்று தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »