Press "Enter" to skip to content

நாகாலாந்தில் பதற்றம்: பயங்கரவாதிகள் என நினைத்து 13 பேர் சுட்டுக்கொலை- உயர்மட்ட விசாரைணக்கு உத்தரவு

நாகாலந்தில் பாதுகாப்பு படையினரால் சுட்டு இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்த நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ சிறப்பு புலனாய்வுக் குழுவின் கீழ் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

நாகாலாந்து மாநிலத்தின் மோன் என்ற மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அசாம் ரைபிள் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் நேற்று மாலை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 13 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் குறித்து விசாரணை நடத்தும்போது, சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்று பின்னர் தெரியவந்துள்ளது.

மேலும் இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ” பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரும் 15 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து வந்த கூலித் தொழிலாளர்கள். இவர்கள், ஒவ்வொரு சனிக்கிழமையும் வேனில் ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். அப்போது இவர்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது ஓடிங் மற்றும் திரு கிராமங்களுக்கு இடையில் பயங்கரவாதிகள் என நினைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக, இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த  நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, சிறப்பு புலனாய்வுக் குழுவின் கீழ் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டு அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்..  சவுதி அரேபியாவில் தேர் விபத்து- கேரள தம்பதி உள்பட 5 பேர் உயிரிழப்பு

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »