Press "Enter" to skip to content

தினசரி பாதிப்பு சற்று உயர்வு- நாடு முழுவதும் புதிதாக 2.71 லட்சம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் தினசரி தொற்று விகிதம் 16.66 சதவீதத்தில் இருந்து 16.28 சதவீதமாக குறைந்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2.71 லட்சமாக உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,71,202 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 71 லட்சத்து 22 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் பாதிப்பு 2.68 லட்சமாக இருந்த நிலையில், நேற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு நேற்று 314 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 066 ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 331 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 50 லட்சத்து 85 ஆயிரத்து 721-ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தற்போது சிகிச்சை எடுத்துவருவோரின் எண்ணிக்கை 15 லட்சத்து 50 ஆயிரத்து 377-ஆக உள்ளது.

இந்தியாவில் தினசரி தொற்று விகிதம் 16.66 சதவீதத்தில் இருந்து 16.28 சதவீதமாக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் மொத்தம் 156 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »