Press "Enter" to skip to content

பனாஜி தொகுதியில் சுயேட்சையாக போட்டி – பா.ஜ.க.வில் இருந்து விலகிய உத்பல் பாரிக்கர் உறுதி

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மகனுக்கு பா.ஜ.க.வில். வாய்ப்பு வழங்கப்படாததால்,அவர் சுயேட்சையாக களம் இறங்க முடிவு செய்துள்ளார்.

கோவா:

கோவாவில் 40 தொகுதிகள் அடங்கிய சட்டசபைக்கு அடுத்த மாதம் 14ந்தேதி

தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பனாஜி தொகுதியில் போட்டியிட  முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மகன் உத்பல் பாரிக்கர் பா.ஜ.க., தலைமையிடம் வாய்ப்பு கேட்டிருந்தார். இந்நிலையில்  கோவாவில் போட்டியிடும் 34 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதையடுத்து உத்பால் பாரிக்கர்,நேற்று பா.ஜ.க.வில் இருந்து விலகினார்.

இது தொடர்பாக கோவா பா.ஜ.க. தலைவர் சதானந்த் தனவதேவுக்கு உத்பல்  பாரிக்கர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும், கோவா பிரதேச பா.ஜ.க. உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்ததற்கான அறிவிப்பாக இந்தக் கடிதத்தை ஏற்றுக் கொள்ளுமாறும்,  உங்கள் ஆதரவுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து பனாஜி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார். சில காரணங்களால் பனாஜி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை. கடந்த 2 ஆண்டில் கட்சிக்கு வந்த ஒருவருக்கு வேட்புமனு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, தற்போது எனது அரசியல் தலைவிதியை முடிவு செய்ய முன்வருகிறேன். எனவே, நான் பனாஜியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவேன் என்பதை அறிவிக்க விரும்புகிறேன் என்று உத்பல் பாரிக்கர் குறிப்பிட்டுள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »