Press "Enter" to skip to content

தெலுங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்- அமித் ஷா நம்பிக்கை

மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி, முதலமைச்சர்
சந்திரசேகரராவ் தெலுங்கானா மக்களை ஏமாற்றி வருகிறார் என்று,உள்துறை மந்திரி அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.

மகேஸ்வரம்:

தெலுங்கானா மாநிலத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘பிரஜா சங்க்ராம யாத்ரா’ நிறைவு நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மத்திய உள்துறை மந்திரி  அமித் ஷா பேசியதாவது:

தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட போது நீலு (தண்ணீர்), நிதுலு (நிதி) மற்றும் நியமகளு (வேலைகள்) என்று கே.சி.ஆர் (கே.சந்திரசேகர ராவ்) வாக்குறுதி அளித்ததை தெலுங்கானா மக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். 

அதில் ஏதேனும் நிறைவேற்றப்பட்டுள்ளதா?  அந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம். தண்ணீர், நிதி, வேலை கொடுப்போம்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தீர்கள், 2 லட்சம் வீடுகள் தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் கொடுக்கவில்லை. ஒவ்வொரு தலித்துக்கும் 4 ஏக்கர் நிலம் கொடுப்பதாக கூறினீர்கள். ஆனால் கொடுக்கவில்லை. பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு 100 கோடி ரூபாய் கூட ஒதுக்கவில்லை. 

மத்திய அரசு திட்டங்களின் பெயரை மாற்றி, அதில் தனது மற்றும் தனது மகன் படத்தை போட்டு மாநில மக்களை கேசிஆர் ஏமாற்றுகிறார்.

அடுத்த ஆண்டு (சட்டசபை) தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சிக்கு வரும். பாதுகாப்பான மற்றும் வளமான தெலுங்கானா மாநிலம் உருவாக பாஜகவை மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »