Press "Enter" to skip to content

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு- வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடைமழை (கனமழை) பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் அடைமழை (கனமழை) பெய்யும் என்றும், 5 நாட்களுக்கு அடைமழை (கனமழை) தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களில் இன்று அடைமழை (கனமழை) பெய்யும். மேலும் தமிழகத்தில் 5 நாட்களுக்கு அடைமழை (கனமழை) தொடரும். வருகிற 18-ந் தேதி தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் அடைமழை (கனமழை) பெய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »