Press "Enter" to skip to content

சென்னை மெரினா கடற்கரையில் சாராய பாட்டில்கள் பதுக்கி விற்பனை- 3 பெண்கள் கைது

கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர், ஜேசிபி வாகனத்தைக் கொண்டு மணலைத் தோண்டி பாட்டில்களை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, மெரினா கடற்கரையில் மணலுக்கடியில் சாராய பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின.  இதையடுத்து, மைலாப்பூர் காவல் துறை ஆணையரின் தலைமையில் எடுத்த நடவடிக்கையின் கீழ் முதல்கட்டமாக 30 லிட்டருக்கும் மேற்பட்ட சாரய பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதனை விற்பனை செய்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இவர்களிடம் நடத்திய விசாரணயைில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணையில், ஆந்திரா மாநிலத்தில் இருந்து கள்ளச்சாராயங்கள் ரெயிலின் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. சென்னை சென்டிரல் தொடர் வண்டி நிலையத்தில் இருந்து பகிர்வு ஆட்டோக்கள் மூலம் கள்ளச்சாராய பெட்டிகளை பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. இவற்றை மெரினா கடற்கரையில் மணலுக்கு அடியில் சாராயங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

கள்ளச்சாராய பாட்டில்களை சிறிய பாட்டில்களில் ஊற்றி ரூ.50 முதல் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரிந்தது. மணலுக்கடியில் இன்னும் 100 லிட்டர் கள்ளச்சாரயம் பதுக்கி வைத்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர், ஜேசிபி வாகனத்தைக் கொண்டு மணலைத் தோண்டி சாராய பாட்டில்களை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி மே 21-ம் தேதி நடைபெறும்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »