Press "Enter" to skip to content

மில்லர், பாண்ட்யா அதிரடி – ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத்

நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் மட்டையாட்டம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 மட்டையிலக்குடுக்கு 188 ஓட்டங்கள் சேர்த்தது. ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 56 பந்துகளில் 2 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 89 ரன்களை குவித்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 47 ஓட்டங்கள் எடுத்தார்.    

குஜராத் சார்பில் ஷமி, யாஷ் தயாள், சாய் கிஷோர், ஹர்திக் பாண்டியா தலா ஒரு மட்டையிலக்கு வீழ்த்தினர்.

இதையடுத்து, 189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சாஹா 2வது பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து ஷுப்மான் கில்லுடன் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் பொறுபுடன் ஆடினார். இந்த ஜோடி 2வது மட்டையிலக்குடுக்கு 72 ஓட்டங்கள் சேர்த்தது. ஷுப்மான் கில் 35 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் வேட் 35 ஓட்டத்தில் வெளியேறினார்.

தொடர்ந்து இறங்கிய கேப்டன் பாண்ட்யா நிதானமாக ஆடினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த டேவிட் மில்லர் அரை சதமடித்து அசத்தினார்.

இறுதியில், குஜராத் அணி 3 மட்டையிலக்குடை இழந்து வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. பாண்ட்யா 40 ரன்னுடனும், மில்லர் 68 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »