Press "Enter" to skip to content

அமெரிக்காவில் பயங்கரம் – தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் பலி

டெக்சாஸ் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகி உள்ளனர்.

இதுதொடர்பாக, உவால்டே மாநில ஆளுநர் கூறுகையில், சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள ஒரு பள்ளியில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 18 வயதுடைய நபர். அவன் 14 மாணவர்களையும் 1 ஆசிரியரையும் சுட்டுக் கொன்றார் எனவும், அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டுள்ளார் என தகவல் தெரிவித்தார். 

படுகாயம் அடைந்த குழந்தைகள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »