Press "Enter" to skip to content

ஜூனியர் என்டிஆர் – ஜான்வி படத்தின் பணிகள் தொடக்கம்

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளன.

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவாவுடன் இணைகிறார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய திரைப்படத்தில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று ஹைதராபாத்தில் தொடங்கின. இந்நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் ராஜமவுலி க்ளாப்போர்ட் அடித்து படத்தின் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், ‘கேஜிஎஃப்’ புகழ் இயக்குநர் பிரசாந்த் நீலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »