Press "Enter" to skip to content

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5வது சுற்று நிறைவு

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தங்கம், வெள்ளி காசுகள் மிக்சி, பேன், கிரைண்டர் ,குக்கர், கட்டில், மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மதுரை:

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் பொங்கல் பண்டிகை அன்று தொடங்கி பல்வேறு ஊர்களில் தொடர்ந்து நடைபெறும் இதில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று நடைபெறும்.

இந்நிலையில், மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 7.30 மணிக்கு ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியை அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

முன்னதாக மாடுபிடி வீரர்கள் மற்றும் அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஆன் லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்றன. போட்டி முழுவதும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடைபெறுகிறது.

அவனியாபுரம் பகுதியில் 20 இடங்களில் காவல் துறையினர் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக 2 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அவசரகால மருத்துவ தேவைக்காக 10 மருத்துவக் குழுக்களும், 108 அவசர உதவூர்தி ஊர்திகளும், காளைகளுக்கான தனி உதவூர்திகளும், தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

ஒவ்வொரு சுற்றிலும் தலா 30 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெற்று வருகிறது.

சிறந்த காளைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் காரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி சார்பில்  மோட்டார் சைக்கிளும் வழங்கப்படவுள்ளது.

தங்கம், வெள்ளி காசுகள் மிக்சி, பேன், கிரைண்டர் ,குக்கர், கட்டில், மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

17 காளைகள் அடக்கிய வலையங்குளம் முருகன் முதலிடத்திலும் (39 விளம்பரம்ட் எண்) அவனியாபுரம் கார்த்தி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »