Press "Enter" to skip to content

“தஞ்சை கோயில் குடமுழுக்கு விழாவுக்கு கூடுதலாக 250 பேருந்துகள் தயார்” – டிஎன்எஸ்டிசி

தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவிற்காக, கூடுதலாக 250 பேருந்துகளை இயக்க தயாராக உள்ளதாக, அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் குழந்தைகளுக்கு புதுக்கோட்டையில் திறனாய்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு அறிவுரைகளைப் பெற்றனர்.

விழாவில் கலந்து கொண்ட கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குடமுழுக்கு விழாவிற்குச் செல்வோருக்காக போதிய பேருந்துகளை இயக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை வழக்கமாக இயங்கும் 560 விட கூடுதலாக 250 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளோம். தேவைப்பட்டால் இன்னும் கூடுதலான பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்துள்ளோம். பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்து பேருந்தில் ஏறினாலே அவர்களுக்கு பயண சீட்டு இல்லாமல் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »