Press "Enter" to skip to content

சென்னை மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – 4 பேருக்கு சாகும்வரை ஆயுள்

சென்னை மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படட் வழக்கில், குற்றவாளிகள் மீதான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக குடியிருப்பில் பணி செய்த லிஃப்ட் ஆப்பரேட்டர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பாபு என்பவர் உயிரிழந்துவிட்டதால் எஞ்சிய 16 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் தோட்டக்காரர் குணசேகரனைத் தவிர மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், குற்றவாளிகள் 15 பேருக்கான தண்டனை விவரங்களை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா அறிவித்துள்ளார்.

அதாவது, ரவிக்குமார், சுரேஷ், அபிஷேக், பழனி ஆகிய 4 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஆயுள் தண்டனை, ஒருவருக்கு 7 ஆண்டுகள் தண்டனை, மற்றவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு நன்னடத்தை காரணமாக வெளியில் வர வாய்ப்பு இல்லை என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அனைத்து குற்றவாளிகளும் ஒன்றரை வருடத்திற்கு மேலாக சிறையில் இருப்பதால் அபராதம் ஏதும் விதிக்கவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »